Friday , 25 April 2014

“என்னுள் என்ன மாற்றமோ” யாழ் கலைஞர்களின் திரைப்பட முயற்சிக்கு கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் பாராட்டு!

எமது கலைஞர்களை நாம் கௌரவிப்பதனூடாக மீண்டும் வளமான சமூகத்தை கட்டியெழுப்பலாம். .

எமது கலைஞர்களின் திறமைகளை கௌரவித்து நமது ஒத்துழைப்புகளையும் கொடுக்க வேண்டியது எம் அனைத்து தரப்பினரினதும் கட்டாய கடமையாகும். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினரான நிசாந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

இந்த வகையில் யாழ் மண்ணின் திரைப்பட வரலாற்றில் நீண்ட கால இடைவெளியின் பின்னர் முழு நீள திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட இருக்கின்றது. என்னுள் என்ன மாற்றமோ.. எனும் இத் திரைப்படத்தை நல்லூரான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அந்த வகையில் கதாநாயகன்,கதாநாயகி உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்து கலைஞர்கள். எனபது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்பட தயாரிப்பு இயக்கம், என்பவற்றை யாழ்பாண பல்கலை கழக மாணவன்.சி.கவிமாறன் மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் போன்றவையும் மிகவும் சிறப்பாக இடம் பெற்றுள்ளன. இம்மாதம் இடம் 14ம் திகதி தொடக்கம். யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் இத் திரைப்படம் காட்சிப்படுத்தப் படவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடர்ச்சியாக வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களிலும் காட்சிப்படுத்தப்படவிருக்கின்றது.

பெருமளவு இந்தியத் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தாலும் யாழ் கலைஞர்களின் இந்த கன்னி முயற்சிக்கு ஒத்துழைக்கும் விதமாக திரையரங்குகளுக்கு சென்று இத்திரைப்படத்தை பார்வையிட்டு எமது கலைஞர்களின் கலைப் பயணத்திற்கு சிறந்த ஒரு அடித்தளத்தை கொடுத்து உதவுமாறு எம்மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Scroll To Top

Get Widget
shared on wplocker.com